கோவையில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு உதவிய இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன்.

இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் சார்பாக கோவை மாநகராட்சி கெம்பட்டி காலனி பகுதியில் இருக்கும் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் சுவச் பாரத் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு அரசு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மாநில குழு உறுப்பினர் முனைவர் எஸ். செல்வகுமார் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் கோவை மாநகராட்சி கல்வி அதிகாரி மற்றும் கோவை மாநகராட்சி மத்திய மண்டல உதவி ஆணையர் மகேஷ் குமார் பள்ளி தலைமையாசிரியர்.  வெள்ளிங்கிரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி ஆசிரியை திருமதி. கிருஷ்ணவேணி அனைவரையும் வரவேற்று பேசினார். இதில் எச் பி சி எல் பொது மேலாளர்  தாமோதரன் அவர்கள் பங்கேற்று தூய்மை பாரதம் திட்டத்தின் கீழ் நடைபெற்ற பேச்சுப்போட்டி கட்டுரைப் போட்டி ஓவியப்போட்டி ஆகியவற்றில் பங்கேற்று தங்கள் திறனை வெளிப்படுத்திய மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி ஊக்கப்படுத்தினார்.

மேலும் பள்ளிக்கு கொசு ஒழிப்புக்காக மூன்று இயந்திரங்கள் வழங்கப்பட்டது பள்ளியில் தூய்மைக்காக மூன்று இடங்களில் குப்பைத் தொட்டிகள் வைத்து பராமரிப்பதற்காக மூன்று குப்பைத்தொட்டிகள் வழங்கப்பட்டன. இதில் 400க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் பொதுமக்கள் ஆசிரியர்கள் ஆகியோர் திரளாக கலந்து கொண்டனர்.

விழா முடிவில் தூய்மை இந்தியாவை பாதுகாப்போம் என்ற கோஷத்தோடு கோவை கமிட்டி காலனி சுற்றுவட்டார பகுதிகளில் விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சமூக ஆர்வலர் நாகேந்திரன் கோவை கண்ணன் நடராஜ் ஜோதி ஆறுமுகம் மாவட்ட விழிப்புணர்வு குழு உறுப்பினர் வெள்ளிங்கிரி உள்ளிட்ட திரளானவர்கள் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் எச் பி சி எல் சார்ந்த விக்னேஸ்வரன் அனைவருக்கும் நன்றி கூறினார்.

Related posts

Leave a Comment