விவசாயிகளுக்கு நிவாரணம் முதலமைச்சர் அறிவிப்பு.

அமெரிக்கன் படைப்புழுவின் தாக்கத்தால் பாதித்த மக்கச்சோளப் பயிர்களுக்கான நிவாரணத்தை விவசாயிகளுக்கு, சட்டப்பேரவை கூட்டத் தொடரில் முதலமைச்சர். எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்தார்.

தமிழகத்தில் ஆண்டுக்கு சுமார் 3.5 லட்சம் ஹேக்டரில் மக்காச்சோளப் பயிர் சாகுபடி செய்யப்படுகிறது. அவற்றில் வேலூர், திருவண்ணாமலை, சேலம், நாமக்கல்,   திருப்பூர்,   கோயம்புத்தூர்,   கடலூர்,   பெரம்பலூர்,  அரியலூர், திருச்சிராப்பள்ளி,    இராமநாதபுரம்,    மதுரை,    திண்டுக்கல், விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் தேனி ஆகிய மாவட்டங்களில் அதிக அளவில் மக்காச்சோளம் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.

கடந்த ஆண்டில் அமெரிக்கன் படைப்புழு கர்நாடகம், ஆந்திர பிரதேசம், தெலுங்கானா மாநிலங்களிலும்,மற்றும் தமிழ்நாட்டிலும் மக்காச்சோளப் பயிரைத் தாக்கியது. இப்புழுவின் தாக்குதல் பெருமளவு சேதத்தை ஏற்படுத்தியது. இப்படைப்புழுவின் தாக்குதல் பற்றி முதல்வரின் கவனத்திற்கு சென்றதும், பயிர் பாதிப்பினை கணக்கெடுக்கும் பணியை மேற்கொள்ள வேளாண்மை மற்றும் வருவாய்த் துறையினருக்கு உத்தரவிட்டு பாதிக்கப் பட்ட அனைத்து மாவட்டங்களிலும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விவசாயிகளிடம் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும் வேளாண்மைத் துறைக்கு உத்தரவிட்டேன் என்றார் முதல்வர்.

வேளாண்மை மற்றும் வருவாய்த் துறையினர். கணகெடுத்ததன் அடிப்படையில், மக்காச்சோளத்தைப் பயிரிட்டு படைப்புழுவால் பாதிக்கப்பட்ட 17 மாவட்டங்களில் உள்ள  இரண்டு லட்சத்து 93 ஆயிரத்து 424 விவசாயிகளுக்கு நிவாரணமாக  இறவைப் பயிருக்கு ஹெக்டருக்கு 13,500 ரூபாயும், மானாவாரி பயிருக்கு ஹெக்டருக்கு 7,410 ரூபாய் மொத்தம் 186  கோடியே 25 லட்ச ரூபாய், நிவாரணமாக வழங்கப்படும் என்று முதலமைச்சர் அறிவித்துள்ளார்.

.

Related posts

Leave a Comment