முன்னாள் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மாவின், அரசியல் பயணம்.

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் உடல்நலக்குறைவால் அனுமதிக்கப்பட்ட மத்திய வெளியுறவுத்துறை முன்னாள் அமைச்சர் சுஷ்மா ‎ஆகஸ்ட் 6-ந்தேதி இரவு காலமானார்.

வழக்கறிஞராகப் பணியைத் தொடங்கிய அவரின் அரசியல் பயணம்.  வெளியுறவுத்துறை மந்திரியாகவும் பாரதீய ஜனதா கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவராகவும் திகழ்ந்தவர். இந்தியாவின்  பதினைந்தாவது மக்களவையின் எதிர்கட்சித் தலைவராக இருந்துள்ளார். இவர் டெல்லியின் முன்னாள் முதல்-மந்திரியாக பதவி வகித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினராக ஏழு முறை தேர்ந்தெடுக்கப்பட்டார். மூன்று முறை சட்டசபை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். டெல்லியின் ஐந்தாவது முதலமைச்சராக பதவி ஏற்றார்.  மேலும் அவர் டெல்லியின் முதல் பெண் முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டவர்.

இந்திரா காந்திக்குப் பிறகு வெளியுறவுத்துறை மந்திரி பதவி வகித்த இரண்டாவது பெண் சுஷ்மா சுவராஜ் ஆவார்.  2006-ம் ஆண்டு முதல் 2009-ம் ஆண்டு வரையிலான இந்திய-இஸ்ரேல் நாடாளுமன்ற நட்புக் குழுவின் தலைவராக செயல்பட்டார்.

 2009 ஆம் ஆண்டு டிசம்பர் 21 ஆம் தேதி சுஷ்மா சுவராஜ் மக்களவையில் பாரதீய ஜனதா கட்சி நாடாளுமன்றக் கட்சியின் தலைவராக நியமிக்கப்பட்டார். 27 மே 2014 முதல் 16 பிப்ரவரி 2016 வரை மத்திய அமைச்சரவையில் வெளியுறவு மற்றும் வெளிநாட்டு இந்திய துறையில் அமைச்சராக பணியாற்றினார்.

வெளிநாடுகளில் சிக்கலில் சிக்கிய இந்தியர்களுக்கு தேவையான உதவியை சுஷ்மா சுவராஜ் செய்து வந்தார். சமூக வலைதளங்களில், இந்தியர்கள் எழுப்பிய கேள்விக்கு உடனுக்குடன் பதிலளித்து வந்தார். இதனால், பலரும் அவரை பாராட்டி வந்தனர்.

சுஷ்மா சுவராஜ் இந்திய வெளியுறவுத் துறை மந்திரியாக 26 மே 2014 முதல் 29 மே 2019 வரை பதவியில் இருந்தார். சமீபத்தில் நடந்த மக்களவை தேர்தலில், உடல்நலக்குறைவால் சுஷ்மா சுவராஜ் தேர்தலில் போட்டியிடவில்லை.

காஷ்மீர் மாநில சிறப்பு அந்தஸ்த்து ரத்து தொடர்பாக நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேறியதும் பிரதமர் நரேந்திரமோடிக்கு சுஷ்மா சுவராஜ் தனது டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்தார். அதில் பிரதமர் அவர்களே இந்த நாளுக்காக  நான் வாழ்நாள் முழுவதும் காத்திருந்தேன் என டுவிட்டு செய்திருந்தார். அதுவே அவரின் இறதியான டுவிட்டர் பதிவாகிப்போனது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *