அம்மா இளைஞர் விளையாட்டு திட்டம்!காஷ்மீரில் குடியரசுத் தலைவர் ஆட்சியை நீட்டிக்கும் மசோதாவிற்கு திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாதி கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. காஷ்மீரில் இந்த ஆண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடத்தப்பட உள்ளது. அதுவரை அங்கு மேலும் 6 மாதங்களுக்கு குடியரசுத் தலைவர் ஆட்சியை நீட்டிப்பதற்கான மசோதா மற்றும் காஷ்மீர் இடஒதுக்கீட்டு மசோதா ஆகிய 2 மசோதாக்கள் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. முன்னதாக மசோதாக்களை  மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மாநிலங்களவையில் நேற்று தாக்கல் செய்தார். இந்த இரு மசோதாக்களுக்கு திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாதி கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

சட்டசபையில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி
அறிக்கை வெளியிட்டார். அதில் நடப்பு அண்டில் 12 ஆயிரத்து 524
ஊராட்சிகளில் மற்றும் 528 பேரூராட்சிகளில் 64 கோடியே 35 லட்சம் ரூபாய்
மதீப்பீட்டில் அம்மா இளைஞர் விளையாட்டுத் திட்டம் செயல்படுத்தப்படும்
என்றார்.
இத்திட்டத்தின் கீழ், அனைத்து கிராம ஊராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில்
இருபாலருக்கும் தனித்தனியாக, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு
மேம்பாட்டுத் துறையால் அம்மா இளைஞர் குழு அமைக்கப்படும். ஒவ்வொரு
கிராமத்திலும், கபடி, வாலிபால்,கிரிக்கெட், கால்பந்து போன்ற ஏதேனும்
மூன்று விளையாட்டுகளுக்கு களம் அமைக்கும் பணிகள் ஊரகப் பகுதிகளில்
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழும்
பேரூராட்சிகளில் பேரூராட்சிகள் பொது நிதியிலிருந்தும் மேற்கொள்ளப்படும்.
இளைஞர்களுக்கு போதிய பயிற்சி அளித்து, ஊராட்சி ஒன்றிய மாவட்ட
மற்றும் மாநில அளவிலான போட்டிகள் இளைஞர் நலன் மற்றும்
விளையாட்டு மேம்பாட்டுத்துறையால் நடத்தப்படும். வெற்றி பெறும் வீரர்,
வீராங்கனைகளுக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் மேம்பாட்டுத்
துறையால் பரிசுகள் வழங்கப்படும்.
ஊரக மற்றும் பேரூராட்சி பகுதிகளில், ஆண்டு முழுவதும் விளையாட்டு
சாதனங்கள் வழங்கவும், திறந்தவெளி உடற்பயிற்சி மையம் அமைக்கவும்,
இளைஞர்களுக்கு பயிற்சி அளித்து போட்டிகள் நடத்தி பரிசு வழங்கவும்,. 64
கோடியே 35 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும் மற்றும் அவற்றின் தொடர்
செலவினத்திற்க்காக மாநில அரசின் நிதியிலிருந்து இளைஞர் நலன் மற்றும்
விளையாட்டு மேம்பாட்டுத் துறை மூலம் மேற்கொள்ளப்படும். அனைத்து
முக்கியமான சர்வதேச சாம்பியன்ஷிப் போட்டிகள் மற்றும் தேசிய
சாம்பியன்ஷிப் போட்டிகளில் சீனியர் மற்றும் ஜீனியர் பிரிவுகளில் பதக்கம்

வெல்பவர்களுக்கும் உயரிய ஊக்கத் தொகை வழங்கப்படும். மேலும்
மாற்றுத்திறனாளிகளுக்கான முக்கிய சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில்
பதக்கம் வெல்பவர்களுக்கும் உயிரிய ஊக்கத் தொகை வழங்கப்படும்.என்று
சட்டப்பேரவையில் முதலமைச்சர் அறிவித்தார்.Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *