உதயமான இளைய சூரியன்,உதயநிதி!! சினிமா தயாரிப்பாளர், கதாநாயகன், கட்சி.

தி.மு.க. வில் இளைஞரணி  செயலாளரானார் உதயநிதி ஸ்டாலின். தி.மு.க. கழக பொதுச்செயலாளர் அன்பழகன் அறிவித்தார். சினிமா தயாரிப்பாளர், கதாநாயகனை, தொடர்ந்து தி.மு.க.கட்சியிலும் அங்கீகாரத்தையும் பெற்றுள்ளார்.

இவர் நாயகனாக நடித்த படங்களில் காமெடி,ஆக்ஷன் போன்ற கலவையான நடிப்பால்  அவருக்கே உரிய நடிப்பு திறமையை வெளிக்காட்டியதன் மூலமாக மெல்ல,மெல்ல மக்களிடம் தான் சிறந்த நடிகன் என்று அறிமுகமானார். தற்போதுஅரசியல் பயணைத்தை தொடங்கியுள்ளார்.

நடந்து முடிந்த மக்களவை தேர்தல் மற்றும் இடைத்தேர்தலில்  உதயநிதி ஸ்டாலின் திமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாக சூறாவளி பிரச்சாரம் செய்தார். அவரது பேச்சு மக்களிடையே அதிக வரவேற்பை பெற்றது.   அதையடுத்து தி.மு.க.வும் அமோக வெற்றி பெற்றது. உதயநிதி ஸ்டாலினுக்கு கட்சியில் பொறுப்பு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை  எழுந்ததது. 

தி.மு.க.வில் இளைஞரணி ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து கடந்த முப்பது  ஆண்டுகளுக்கு மேலாக ஸ்டாலின்  இளைஞரணி  செயலாளராக செயல்பட்டு வந்தார். அதன்பின்பு ஒவ்வொரு பொறுப்பிலிருந்தும். படிப்படியாக செயல்தலைவர்.    கலைஞர் கருணாநிதி மறைவுக்கு பின்பு ஸ்டாலின் அவர்கள்  தி.மு.க வின்  தலைவர் பொறுப்புக்கு வந்துள்ளார்.

 தி.மு.க முன்னாள் அமைச்சர் வெள்ளகோவில் சாமிநாதன் இளைஞரணி  செயலாளர் பொறுப்பிலிருந்தார். இதையடுத்து உதயநிதி ஸ்டாலினை தி.மு.க. இளைஞரணிச் செயலாளராக நியமனம் செய்து கழக பொதுச்செயலாளர் அன்பழகன் அறிவித்தார்.

இந்த அறிவிப்பு கட்சித் தொண்டர்கள் மத்தியில் பலத்த உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திமுக இளைஞரணி செயலாளராக நியமிக்கப்பட்ட பின் மெரினாவில் உள்ள முன்னாள் தலைவர் கலைஞர் கருணாநிதி நினைவிடத்தில், உதயநிதி ஸ்டாலின் மரியாதை செலுத்திய பின்பு தனது அரசியல் பயணத்தை தொடங்கியுள்ளார்.

        -டி.மகேஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *